Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் .

0

'- Advertisement -

ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் :

 

திருச்சி பள்ளிவாசல்களில் இன்று சிறப்பு தொழுகை

 

த.மு.மு.க, யுனிவர்சல் ஜமாத், தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமானோர் பங்கேற்பு.

 

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து நகரங்களிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடந்து வருகிறது.

ரமலான் மாதத்தில் மாதம் முழுக்க நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் இன்று நோன்பை நிறைவு செய்து ரம்லான் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இதைெயாட்டி பள்ளிவாசல்களிலும், திறந்த வெளி மைதானங்களிலும் இஸ்லாமியர்கள் திரண்டு தொழுகை நடத்தினர்.

தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

 

திருச்சியில் இன்று காலை உழவர் சந்தை மைதானத்திலும் பள்ளிவாசல்களிலும் தொழுகை நடந்தது. இதில் ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

 

த.மு.மு.க.சார்பில் சிறப்பு தொழுகை

 

ரமலானை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு தொழுகையில் பள்ளிவாசல்களிலும், திடல்களிலும் கூடி இஸ்லாமியர்கள் ஈடுபட்டார்கள். சையது முர்துசா பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகை நிகழ்ச்சிக்கு தமுமுக கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார்.மேற்கு மாவட்ட தலைவரும், திருச்சி மாநகராட்சி கவுன்சிலருமான பைஸ்அகமது முன்னிலை வகித்தார். இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது இஸ்லாமியர்கள் தொழுதபின் ஒருவருக்கொருவர் தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் தொடர்ந்து குடும்பம் குடும்பமாக தங்களுடைய செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக ஈகைத்திருநாள் எனும் நோன்பு பெருநாள் தொழுகை தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.

Suresh

இதில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் , குழந்தைகளும் முதியவர்களும்

கலந்து கொண்டு தங்களின் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – திருச்சி மாவட்டத்தின்

சார்பாக சுமார் 25’க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று பெருநாள் தொழுகை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்ற இப்பெருநாள் தொழுகையில் மாவட்ட செயலாளர் ஜாஹீர், பொருளாளர் லால் பாஷா, துணை தலைவர் தர்கா காஜா, துணை செயலாளர் சமயபுரம் உமர், பிலால்,ஏர்போர்ட் கனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் சகோ.முஹம்மது ஒலி பேசினார்.

பெருந்திரளாக கூடிய மக்கள் ஒரு மாதம் நோன்பிருந்து இன்றைய தினத்தில் இந்த பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி

ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

யுனிவர்சல் ஜமாத் சார்பில் திருச்சி பீமநகர்  பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் யுனிவர்சல் ஜமாத் தலைவர்  பீம நகர் ரஃபிக் தலைமையில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஈகைப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர் .

 

பாப்பா குறிச்சியில் சிறப்பு தொழுகை.

திருச்சி பாப்பாக்குறிச்சி காட்டூர் பர்மா காலணியில் அமைந்துள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தலைமை இமாம் முகமது முஸ்தபா தொழுகை நடத்தி உலக ஒற்றுமை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.தொழுகையில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். தொழுகை முடிவில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரமலான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

தொழுகையில் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது ரபிக்செயலாளர் ரபிக் துணைச் செயலாளர்சரிப்பொருளாளர்நூருல் துணைத் தலைவர் தாஜுதீன் ஆலோசகர் எஸ் எஸ் ரஹமத்துல்லா உசேன் அபுபக்கர் மற்றும். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் அனைவருக்கும் தனது ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.