உருமு தனலட்சுமி கல்லூரியின் 1991-1993 ஆம் ஆண்டு பொருளாதாரம் பிரிவு (B.A.Economics) மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் தலைவர் டாக்டர் எஸ். ராமலிங்கம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மேலும் பேராசிரியர்கள் பெருமாள் ஜஹான் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் திலகர், டி. சொக்கலிங்கம் வாழ்த்துகளோடு இனிதே நடைபெற்றது.
முன்னாள் பொருளாதாரம் துறை மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பேராசிரியர் எஸ்.எம். சூரியகுமார் அவர்கள் நல்லாசியுடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பொருளாதார துறை முன்னாள் மாணவர்கள் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்து இருந்தனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கல்லூரி கால நினைவுகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர் .
இந்நிகழ்ச்சியை முருகானந்தம் ஏற்படும் செய்திருந்தனர். இறுதியாக ராஜசேகர் நன்றி உரையாற்றினார்.
மதியம் அனைவருக்கும் சைவம் மற்றும் அசைவ உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வாழ்வில் சிறந்தது நட்பா? உறவா? என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.