அய்யாக்கண்ணு மணி அடித்துக்கொண்டு வாயில் வாழைப்பழம் , மண்டை ஓடுகளுடன் டிசைன் டிசைனாக ஆர்ப்பாட்டம் செய்வது விவசாயிகளுக்காக அல்ல பணத்திற்காக மட்டுமே.
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்
மண்டை ஓடுகளுடன் முற்றுகை போராட்டம்.
வேளாண் விளை பொருள்களுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டுவர
வேண்டும்.
இதற்காக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திய விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை உடனே விடுவிக்க
வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்

முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள்
அரை நிர்வாணமாக, மனித மண்டை ஓடுகளை கையில் ஏந்தி, வாழைப்பழங்களை வாயில் வைத்து மணி அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில துணைத்தலைவர் மேகராஜன், மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அய்யாக்கண்ணு இது போன்று டிசைன் டிசைனாக ஆர்ப்பாட்டம் செய்வது விவசாயிகளுக்காக அல்ல தனது வருமானத்திற்கே.
சில உண்மையான விவசாயிகளுக்கு வங்கியில் விவசாய கடன் வாங்கி தருகிறேன் , பயிர்களுக்கு மானியம் வாங்கி தருகிறேன் , கடனுக்காக டிராக்டர் போன்ற விவசாய வாகனங்களை வங்கியில் பறிமுதல் செய்தால் வங்கி மேனேஜரிடம் நான் விவசாய சங்க ஸ்டேட் செகரட்டரி அட்வகேட் அய்யாக்கண்ணு பேசுகிறேன் என பஞ்சாயத்து பேசி அதற்கு அந்த ஏழை விவசாயிகளிடம் கமிஷன் வாங்குவது ,
100 விவசாயிகளை திரட்டி டெல்லி சென்று போராட போகிறேன் என ரயில்வே நிலையம் சென்ற அய்யாக்கண்ணு வை உள்ளூர் அமைச்சர் அழைத்து டெல்லி செல்ல வேண்டாம் எனக் கூறிய போது டிக்கெட் செலவு ஏகப்பட்டது ஆகிவிட்டது எனக் கூறியவுடன் அமைச்சர் அலுவலகத்திற்கு அழைத்து 20 லட்ச ரூபாய் அளித்துள்ளார் .
நான் இதுபோன்று மண்டை ஓடு , கோமணத்துடன் ஆர்ப்பாட்டம் , நிர்வாணமாக ஓடுவது, எலியை கடிப்பது போன்ற டிசைன் டிசைனாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருமானம் பார்த்து வருகிறார் விவசாய சங்கத் தலைவர்? வழக்கறிஞர் அய்யாக்கண்ணு.