தினமும் 244 போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் பழச்சாறு வழங்கும் திட்டம் . திருச்சி கமிஷனர் காமினி தொடங்கி வைத்தார் .
திருச்சியில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழச்சாறு வழங்கியும், வெயிலை தாங்கும் தொப்பிகளையும் போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கி மாநகர காவல் ஆணையர் காமினி நேற்று காலை செவ்வாய்க்கிழமை டிவிஎஸ் டோல்கேட் பாலத்தின் கீழ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் ஈஸ்வரன், சிபின் மற்றும் காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 244 போக்குவரத்து காவலர்களுக்கு மோர், எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .