திருச்சியில் செல்போன் டவர் அமைக்கும் பணியின் போது ரூ.5.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம். கலெக்டரே கூறினாலும் பணியை நிறுத்த மாட்டோம் என கூறும் ஏர்டெல் , இண்டஸ் நிறுவனத்தினர். உயிர்பலி ஏற்பட்ட பின் பணியை நிறுத்தி என்ன பயன்?
திருச்சி: புதிய செல்போன் டவர் அமைக்க கூடாது என வெள்ளை வெற்றிலை கார தெரு பகுதியை சேர்ந்தவர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் , ஆணையர், டவர் அமைக்கும் நிறுவனங்களுக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
தொலைதொடர்பு சேவை சம்மந்தமாக, வெள்ளை வெற்றிலைக்கார தெருவில், எங்கள் வீடுகளுக்கு அருகில் டவுன் சர்வே எண் 180 ல் உள்ள வீட்டு கட்டிடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளுக்காக எங்கள் வீடுகளுக்கு செல்லும் குறுகலான சந்து பாதையில் அதற்கான கருவிகளையும் இதர சாதனங்களையும் வைத்திருந்தீர்கள். கடந்த
09.03.2025 அன்று தாங்கள் செல்போன் கோபுரத்தை நிறுவுவதற்காக அதற்கான சாதனங்களை கோபுரம் அமைக்கும் வீட்டின் தரைதளத்திலிருந்து 4வது மாடியான மொட்டை மாடிக்கு கயிறுகட்டி ஏற்றியபோது அந்த சாதனங்கள் மின்சாரம் செல்லும் கம்பிகளில் மோதிவிட்டதால் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதை தங்கள் நிறுவன பணியாளர்களுக்கு தெரிவித்த போதும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 12.03.2025 அன்று காலை 7.45 மேற்படி சாதனங்களை மொட்டை மாடிக்கு ஏற்றியபோது அந்த சாதனங்கள் மின்சார கம்பிகளில் மோதியதால் மின்சார விபத்து ஏற்பட்டு எங்களில் 2வது நபரின் வீட்டு மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டுவிட்டது. எங்களில் 2 வது நபரின் சங்கீத் வீடியோ மற்றும் கேபிள் சர்வீஸ் தொழில் சாதனங்கள் அனைத்தும் மேற்படி மின்விபத்தினால் பாதிக்கப்பட்டு ரூ.5,50,000/- மதிப்புள்ள பொருட்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகிவிட்டது. மேலும் தங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் நாங்கள் மேற்படி பணிகளை தடுப்பதாக காவல்துறையில் புகார் தெரிவித்தனர். நாங்கள் உண்மையை தெரிவித்தபோதும் மேற்படி பணிகள் தொடர்பாக விபத்துகளை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்கண்டபடி மின்விபத்து ஏற்பட்டுவிட்டதால் சுற்றுப்புறத்தில் எங்களுக்கு உள்ள கட்டிடங்களுக்கும், வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் இந்த அறிவிப்பை பெற்றுக்கொள்ளும் ஏர்டெல் பாரதி நிறுவனம் மற்றும் இண்டஸ் டவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தினர்கள் எங்கள் வீடுகளின் அருகில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் மேற்படி செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுத்திவிட்டு மேற்படி இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்த கடிதத்தை பெறும் திருச்சி மாவட்ட ஆட்சியர், மற்றும் மாநகர காவல் ஆணையர் அதிகாரிகளான தாங்கள் மேற்படி இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்படுவதை தடுக்கவும், செல்போன் கோபுரம் அமைக்கபடுவதற்கான அனுமதி மற்றும் இயக்கப்படுவதற்கான அனுமதியை ரத்து செய்வதற்கான நடவடிக்களை மேற்கொண்டு உயிருக்கும் எங்களுக்கும் எங்கள் உடைமைக்கும் வேண்டிக்கொள்கிறோம். வீடுகளை ஒட்டியுள்ள பாதுகாப்பு வழங்கும்படி மக்களின் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார் .
தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கேட்டு பகுதி பொதுமக்கள் 60க்கும் மேற்பட்டோர் கையெழுத்துட்டு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் உயிர் பலி ஏற்பட்ட பின் நடவடிக்கை எடுத்து எந்தவித பயனும் இல்லை என அப் பகுதி பொதுமக்கள் புலம்புகின்றனர் .