காஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு 50 டிப்ஸ் என லஞ்சம். வாடிக்கையாளருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு.
திருச்சி காட்டூர் கைலாஸ் நகரைச் சேர்ந்தவர் ஆர்.வைத்தீஸ்வரன். மருத்துவர். 2023 ஜூலை 18 அன்று இவரது வீட்டுக்கு காஸ் சிலிண்டர் விநியோகம் செய்ய வந்த பாண்டி என்பவர் ரூ.50 லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால், வைத்தீஸ்வர ன் லஞ்சம் கொடுக்க மறுத்த தால், அந்த நபர் சிலிண்டரை திரும்ப எடுத்துச் சென்றுவிட்டார்.
பின்னர், காஸ் விநியோகஸ்தர் அலுவலகத்துக்குச் சென்று வைத்தீஸ்வரன் முறையிட்டார். அதன்பின், அவருக்கு காஸ் சிலிண்டர் விநியோகிக்கப் பட்டது. பின்னர், இந்த சம்பவத்தால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உதவியுடன், திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வைத்தீஸ்வரன் வழக்கு தொடர்ந்தார். பின்னர்,
இந்த வழக்கு பதிவாளர் அனுமதியுடன் மதுரை மாவட்ட நுகர்வோர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முக பிரியா ஆகியோர். வைத்தீஸ்வர னுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரம். வழக்குச் செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
இதுபோன்று பல தீர்ப்புகள் வழங்கினாலும் திருச்சியில் தொடர்ந்து சிலிண்டர் சப்ளை செய்யும் வரும் நபர்கள் ரூ.30 முதல் ரூ.50 வரை கட்டாய வசூல் செய்து வருகின்றனர் . அப்படி தர தயங்கும் வீடுகளுக்கு சிலிண்டர் கேட்டு புக் செய்து நீண்ட நாள் கழித்து வேண்டுமென்றே டெலிவரி செய்து வருகிறார்கள் .