Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

‘ஸ்னாப் ஷாட்’ செயலி மூலம் பழக்கம். நண்பனுடன் வீடியோ காலில் நிர்வாணமான பேசிய மாணவியின் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்து நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய வாலிபர் கைது .

0

'- Advertisement -

நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய கல்லூரி மாணவியின் நிர்வாண புகைப்படத்தை ‘ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து வைத்து கொண்டு உல்லாசமாக இருக்க வற்புறுத்தி மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தற்போது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் , போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகி முன்பின் தெரியாதவர்கள் பழகி அதன் மூலம் கற்பழிப்பு , மிரட்டி பணம் சம்பாதிப்பது , கொலை போன்ற பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது .

 

தற்போது இது போன்று 2 மாத சோசியல் மீடியாவில் 2 மாதங்களுக்கு முன் அறிமுகமானவரின் நட்பு விபரீதமாக முடிந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு :-

 

Suresh

சென்னை திருவொற்றியூரை அடுத்துள்ள எர்ணாவூர் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவிக்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் கான் (வயது 24) என்ற இளைஞருடன் ‘ஸ்னாப் ஷாட்’ செயலி மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

 

தமீம் கானுடன் அந்த கல்லூரி மாணவி நெருக்கமாக பழகி வந்திருக்கிறார். இதனிடையே அண்மையில், தமீம் கான், அந்த கல்லூரி மாணவியுடன் வீடியோ காலில் பேசியபோது அவரை ஆடையின்றி நிர்வாணமாக பேச சொல்லியிருக்கிறார். அதனை ஏற்று மாணவியும் நிர்வாணமாக தோன்றியிருக்கிறார். இதனை தனது செல்போனில் மாணவிக்கே தெரியாமல், ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கிறார் தமீம் கான்.

 

இதனையடுத்து, நிர்வாண புகைப்படத்தை கல்லூரி மாணவியின் செல்போனுக்கு அனுப்பிய தமீம் கான், என்னுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும், மறுத்தால் உன்னுடைய நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த கல்லூரி மாணவி, உன்னை நம்பித்தானே பழகினேன் இப்படி செய்து விட்டாயே என கதறிய அவர் தயவு செய்து என்னை விட்டுவிடு. என் பெற்றோருக்கு தெரிந்தால் அவர்கள் தற்கொலையே செய்து கொள்வார்கள் என கெஞ்சியிருக்கிறார்.

 

இருந்த போதிலும், மனம் இரங்காத தமீம் கான் கல்லூரி மாணவியின் நிர்வாண புகைப்படத்தை தனது நண்பர்களுக்கும் செல்போனில் அனுப்பி வைத்து உள்ளார். அவரது நண்பர்களும் அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு கல்லூரி மாணவிக்கு போன் செய்து தங்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளவேண்டும் என ஆளாளுக்கு மிரட்டி இருக்கின்றனர்.

 

இதனால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி, இச்சம்பவம் தொடர்பாக எண்ணூர் மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தமீம் கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.