திருச்சி அரியமங்கலத்தில் விபத்தில் காயம் அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை .

போலீசார் விசாரணை
திருச்சி அரியமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி சுதா (வயது 45 ) இவர் சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுதா யாரும் எதிர்பாராத வகையில் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது கணவர் ரவிக்குமார் அரியமங்கலம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .