திருச்சியில் காவிரி ஆற்றில் மூழ்கி கொத்தனார் பாரிதாப சாவு .
கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் 4வது தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 41) கொத்தனார் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்பொழுது அவருடன் வந்த நண்பர் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் பொன்னுச்சாமி காவிரி ஆற்றில் நடுப்பகுதி வரை சென்று தண்ணீரில் மூழ்கி குளித்தார். அப்பொழுது பொன்னுச்சாமி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட.து. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தேடிய பின் பொன்னுச்சாமி உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.