Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஏர்போர்ட் அருகே வீட்டின் முன் நிறுத்திய புல்லட் பைக்கை திருடிய 2 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சி ஏர்போர்ட்டில் இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது.

 

Suresh

திருச்சி ஏர்போர்ட் கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மகன் ஆகாஷ் பாரதி. இவர் தனது இருசக்கர வாகனத்தை (புல்லட் ) எப்பொழுதும் போல் இரவு வீட்டு முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். பின்னர் வீட்டில் தூங்கி முழித்தவுடன், வந்து வெளியே பார்த்தபோது இருசக்கர வாகனம் (புல்லட்) காணாதது கண்டு திடுக்கிட்டார். உடனே இதுகுறித்து ஆகாஷ் பாரதி ஏர்போர்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.

 

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தை திருடியதாக கே.கே.நகர் பகுதியை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ், லால்குடி தாளக்குடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்கிற தாயுமானவன் ஆகிய இரண்டு வாலிபர்களை ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புல்லட் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.