திருச்சியில் போக்குவரத்து நிறைந்த கன்டோன்மெண்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் வங்கி பொது மேலாளரின் காரை திருடிய வாலிபர் கைது.
திருச்சி ராமச்சந்திர நகர் ஸ்டாலின் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57) இவர் தனியார் வங்கியில் முதுநிலை பொது மேலாளராக பணிபுரிந்து வருகிறார்,
சம்பவத்தன்று இவர் வில்லியம்ஸ் ரோடு பகுதியில் தனியார் வங்கி அருகே காரை நிறுத்திவிட்டு வங்கிக்கு சென்றார்.பிறகு மீண்டும் வந்து பார்த்த பொழுது காரை காணவில்லை.
இதனைப் பார்த்து அதிர்ச்சிடைந்த பெருமாள் உடனடியாக கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் உடனடியாக திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு வாலிபர் காரை ஓட்டி வந்தார். அவர் மீது சந்தேகப்பட்ட
போலீசார் காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்தபோது கடலூர் மாவட்டம் பகுதியை சேர்ந்த சுந்தர வடிவேல் (வயது 23 ) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் ஒட்டி வந்த கார் திருட்டு கார் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து கண்டோன்மென்ட் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தர வடிவேலுவை கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர்.