Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2026 ல் அதிமுக ஆட்சிதான் : திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி

0

'- Advertisement -

2026 -ல் நிச்சயம் அதிமுக ஆட்சி அமையும்:

இரு மொழி கொள்கையில்
அதிமுக உறுதியாக உள்ளது

திருச்சி பொதுக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு


தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் மரக்கடையில் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. பகுதி செயலாளர்கள் ரோஜர், வாசுதேவன், கலீல்ரகுமான், அன்பழகன், ஏர்போர்ட் விஜி , பொதுக்குழு உறுப்பினர் சதர்,வட்டச் செயலாளர்கள் கயிலை கோபி, நத்தர்ஷா,கட்பீஸ் ரமேஸ், மார்க்கெட் கே.டி.தங்கராஜ், சையது ரபி, டைமண்ட் தாமோதரன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

கூட்டத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், தலைமை கழக பேச்சாளர் அம்புஜம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி பேசியதாவது:-

எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு அதிமுக பிளவுபட்டு இரட்டை இலை சின்னம் இழந்தது அதிமுக மீண்டும் ஜெயலலிதா கையில் வந்த பின்பு அவர்
மத்திய அரசோடு இணக்கமாக செயல்பட்டு இரட்டை இலையை மீட்டெடுத்தார்.


தமிழ்நாட்டில் மாணவர்கள் கல்வி கற்க எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் என்கிற புரட்சிகர திட்டத்தை நிறைவேற்றினார்.
அதன் பின் ஜெயலலிதா மாணவர்கள் கல்வி கற்க இலவச மிதிவண்டி, மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி சமூக மாற்றத்தை நிறைவேற்றினார். அதன் காரணமாக ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு உயர்கல்வியில் சேருபவர்கள் சதவீதம் 47 சதவீதமாக உயர்ந்தது.
கடந்த 50 ஆண்டுகளில் சமூக நீதி சமத்துவத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்கள் கல்வி கற்றதால் சமூக முன்னேற்றத்தில் 63.3 விழுக்காடு தமிழ்நாடு வளர்ந்துள்ளது என ஆளுநர் 2023 ல் கூறினார்.
50 ஆண்டுகால ஆட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக தான்.
இந்தியாவில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அதன் காரணமாக தான் தி.க தலைவர் வீரமணியே அவருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்கிற பட்டம் வழங்கினார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா சிமெண்ட் நிறுத்தப்பட்டு அதானி நிறுவனத்தின் சிமெண்ட் வந்து கொண்டிருக்கிறது
தேர்தல் வாக்குறுதிகளில் அளித்த எந்த அறிவிப்பையும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை, சட்டம் ஒழுங்கையும் முதலமைச்சர் காக்கவில்லை.
மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார் எங்களை பார்த்து அடிமை என்றார்கள் நாங்கள் அடிமை என்கிற நிலைக்கு ஏன் சென்றோம்.
தமிழ்நாடு மக்களுக்கு தேவையான திட்டங்களை கேட்கும் போது அது அடிமையல்ல மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருந்தோம். அதை திமுக ஏன் செய்யவில்லை.
மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய யாருடன் இணக்கமாக செல்லவும் தயாராக உள்ளோம்.
இரு மொழி கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. நாங்கள் அரசியலுக்காக இரு மொழி கொள்கையை பயன்படுத்தவில்லை.
திமுக அரசு மீது மக்களுக்கு செல்வாக்கு குறைந்ததால் மும்மொழி கொள்கை பிரச்சனையையும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை பிரச்சனையையும் கொண்டு மக்களை திசை திருப்புகிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் நிதியை பெற்று தருவோம்
அனைத்து கட்சி கூட்டத்தில் கல்வி நிதி பிரச்சனை குறித்து திமுக பேச கூடாது. மும்மொழி கொள்கை குறித்தும் தொகுதி மறுவரை குறித்து மட்டும் தான் பேச வேண்டும்
ஒருவர் அடுத்த 62 வாரங்கள் நாங்கள் தான் எதிர்க்கட்சி என கூறுகிறார். அதை அவரே கூற கூடாது. மக்கள் தான் அதை கூற வேண்டும் அதிமுக தான் 2026 ல் ஆட்சிக்கு வரும் என மக்கள் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் எந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதன் பின் அதிமுக இருக்கும் .
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன்,மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி,பகுதி செயலாளர்கள் புத்தூர் ராஜேந்திரன், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, கலைவாணன், நாகநாதர் பாண்டி, திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் வக்கீல் சி.முத்துமாரி,
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த்,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, ஐ.டி.பிரிவு வெங்கட் பிரபு, இளம் பெண்கள் பாசறை லோகநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கதிரவன் ,
சிறுபான்மை பிரிவு அப்பாஸ்,மாநகர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்கள் சில்வர் சதீஷ்குமார், டி.ஆர்.சுரேஷ் குமார்,ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்தர், எனர்ஜி அப்துல் ரகுமான், கோழிக்கடை புத்தூர் பாலு,
கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி,வக்கீல்கள் முல்லை சுரேஷ், சசிகுமார், ஜெயராமன், கௌசல்யா,கங்கைச் செல்வன் ,சுரேஷ், கங்கைமணி,
மற்றும் நிர்வாகிகள் மார்க்கெட் பிரகாஷ், தென்னூர் ஷாஜகான்,தலைமைக் கழக பேச்சாளர் அப்பா குட்டி,ரமணிலால், ஜெயகுமார், எடத்தெருபாபு, டிபன் கடை கார்த்திகேயன் ,பேராசிரியர் தமிழரசன், டாஸ்மாக் பிளாட்டோ ,
அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, உறந்தை, மணிமொழியன், ஆருண்,பாலக்கரை ரவிந்திரன், சக்திவேல் குருமூர்த்தி, வாழைக்காய் மண்டி சுரேஷ் ,பூக்கடை முத்துக்குமார், கல்லுக்குழி முருகன், உடையான்பட்டி செல்வம்,கே.பி ராமநாதன், கே.டி ஏ. ஆனந்தராஜ், ராமலிங்கம், நார்த்தமலை செந்தில்குமார்,
அலெக்ஸ், சிந்தா மணி மகாதேவன், சகாபுதீன், சிந்தமாணி கிருஷ்ணன், குமார், பொம்மாசி பாலமுத்து, ஐ.டி பிரிவு கதிரவன், நாகராஜ், ராமலிங்கம், கதிர்வேல்,ஜெகதீசன்,
சிந்தாமணி கிருஷ்ணன், செல்லப்பன், ரமணிலால், காசிபாளையம் சுரேஷ்குமார் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.முடிவில் காமராஜ், ரியாஸ் வெங்காயமண்டி கணேசன், செல்லப்பன், பாலக்கரை பகுதி மாணவரணி செயலாளர் மார்க்கெட் பிரகாஷ் ஆகியோர் நன்றி கூறினர்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.