வரும் 4ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அழைப்பு .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க மாவட்ட பொறுப்பாளர்கள்:
M.C.தாமோதரன்.
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
தாடி.ம.இராசு
அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர்
ஆகியோர்
பூத் கமிட்டி அமைப்பது கட்சி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பது பற்றி (4.3.2025, செவ்வாய்க்கிழமை) காலை 10மணி அளவில் சோமரசம்பேட்டை ஜோதி மஹாலில் ஆலோசனை வழங்குகிறார்கள்.
அது சமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் .