Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாகனங்களில் இனி இவற்றை செய்தால் மெக்கானிக்குகள், கார் டெக்கரேட்டர்ஸ் , ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை.

0

'- Advertisement -

இந்தியாவில் வாகனங்களை பலர் சட்ட விரோதமான முறைகளில் மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான முறையில் ஒலி எழுப்பும் சைலென்சர்களை இரு சக்கர வாகனங்களில் பொருத்தி கொள்வது, தடை செய்யப்பட்ட கருப்பு ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டி கொள்வது போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

அளவுக்கு அதிகமான ஒலியை எழுப்பும் சைலென்சர்களை கொண்ட இரு சக்கர வாகனங்களால் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. தடை செய்யப்பட்ட கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கார்களுக்கு உள்ளே நடக்கும் சட்ட விரோதமான செயல்பாடுகளை கண்டறிய முடியாமல் போகிறது.

நாங்கள் இங்கே கூறியுள்ள 2 மாடிஃபிகேஷன்களும் சிறிய உதாரணம் மட்டுமே. இது போல் இன்னும் பல்வேறு மாடிஃபிகேஷன்களை வாகன உரிமையாளர்களை செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு, சாலை விபத்துக்கள் மற்றும் சட்ட விரோதமான செயல்பாடுகள் அரங்கேறுகின்றன.

எனவே வாகனங்களில் சட்ட விரோதமாக செய்யப்படும் மாடிஃபிகேஷன்களை தடுக்க காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறை தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி சட்ட விரோதமான மாடிஃபிகேஷன்களை செய்ய உதவி செய்யும் கார் டெக்கரேஷன் நிறுவனங்கள், மாடிஃபிகேஷன்களுக்கு தேவைப்படும் உபகரணங்களை விற்பனை செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக்குகள் மீது இனி வழக்கு பதிவு செய்யப்படும் என ஹைதராபாத் காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறை தரப்பில், விழிப்புணர்வு கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கார் டெக்கரேஷன் நிறுவனங்கள், வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் மெக்கானிக்குகள் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக 250க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன் முடிவில்தான், வாகனங்களில் சட்ட விரோதமான மாடிஃபிகேஷன்களுக்கு உதவி செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு காரணமாக இனி வாகனங்களில் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் மாடிஃபிகேஷன்களின் எண்ணிக்கை குறையும் என தெரிகிறது.

வாகனங்களில் சட்ட விரோதமாக செய்யப்படும் மாடிஃபிகேஷன்களுக்கு எதிரான ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறை தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ரோடு ரோலர் மூலம் 1,000 சைலென்சர்கள் அழிக்கப்பட்ட சம்பவத்தை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்ட சட்ட விரோதமான 1,000 சைலென்சர்களை, ஹைதராபாத் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், சிறப்பு வாகன தணிக்கை நடத்தி பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை ரோடு ரோலர் மூலமாக நசுக்கி அழித்தனர். இது போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்  மேலும் இதுபோன்று தமிழகத்தில் விரைவில் இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.