திருச்சி உறையூரில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் .
குழந்தை இல்லாததால் ஏக்கத்தில் நடந்த விபரித சம்பவம்.
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30) இவருடைய மனைவி அம்சவள்ளி ( வயது 25 ) இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர்.
ஐந்து ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை.
குழந்தை பாக்கியம் கிடைக்காததால்
செந்தில்குமார்
வாழ்க்கையில் விரக்தி அடைந்து உள்ளார். இதனால் கடந்த நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது .
அந்த நிலையில் நேற்று மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார் உண்மையில் குழந்தையில்லாத விரக்தியில் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.