Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வு.அமைச்சர் கே.என்.நேரு சீர்வரிசை வழங்கி வாழ்த்து

0

'- Advertisement -

திருச்சியில்

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.

அமைச்சர் கே.என்.நேரு சீர்வரிசை வழங்கி வாழ்த்தினார்.

 

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு. கர்ப்பிணி பெண்களுக்கு மங்கலப் பொருட்களான வளையல், மங்கலநாண், மஞ்சள். குங்குமம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், வேப்பம் காப்பு, மாலை மற்றும் கர்ப்பகாலம் குறித்த துண்டு பிரசங்களை வழங்கி வாழ்த்தினார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்

பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதாரிணி, மாவட்ட திட்ட அலுவலர் நித்யா, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.