திருச்சி தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடல் . தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் …
திருச்சி ஜங்ஷன் ரயில்வே ஆர்பிஎப் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

இன்று 19.02.2025 காலை 9 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையம் அருகே பூமாலைப்பட்டி ரயில்வே ட்ராக்கில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெயர், விலாசம் தெரியாத பெண் நபர் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளார்.
மேற்படி நபரின் வலது கையில் நாகண்ணா என்று தெலுங்கில் பச்சை குத்தப்பட்டுள்ளது.
மேற்படி நபரை பற்றிய தகவல் தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண், திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையம் 86672-59844, மற்றும் 94434- 72524 என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .