திருச்சி காந்தி மார்க்கெட்டில் பேருந்துக்காக காத்திருந்த முதியவரிடம் ரூ.50 ஆயிரத்தை ஆட்டையை போட்டு 2 வாலிபர்கள் கைது .

பெரம்பலூர் மாவட்டம் துறையூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60) இவர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
கழகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 15ந்தேதி திருச்சி வந்தார்.பிறகு காந்தி மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு ஊருக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அருகில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிக்க அருந்தினார் .அப்பொழுது அவர் தான் வைத்திருந்த கைப்பையில் ரூபாய் 50 ஆயிரம் பணம் இருந்துள்ளது.
இதனை நோட்டமிட்ட இரண்டு மர்ம ஆசாமிகள் சேகர் அருகில் வந்து அவரின் கவனத்தை திசை திருப்பி அவர் வைத்திருந்த கைப்பையை திருடிக்கொண்டுஅங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பிறகு தனது கை பையில் இருந்த ரூபாய் 50,000 பணம் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இந்த சம்பவம் குறித்து சேகர் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்திடமாக சுற்றி திரிந்த இரண்டு மர்ம ஆசாமிகளை
பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிராப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 40) திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழனி குமார் (வயது 34) என்பதும், இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சேகரிடம் ரூபாய் 50,000 பணத்தை திருடியதும் தெரிய வந்தது .
இதையடுத்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார், பழனி குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.