கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது. திருச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
சமீப காலமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது :-
புது கேள்விகள் எல்லாம் கேட்டால் நான் எப்படி பதில் கூறுவது.
அந்தியூர் சட்டமன்ற தொகுதி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி அங்கு சில துரோகிகளால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதை ஏற்கனவே நான் தெளிவுப்படுத்தி விட்டேன்.
பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என ஒ.பி.எஸ் பேசி இருப்பது குறித்து ஓ.பி.எஸ்ஸிடம் தான் கேட்க வேண்டும்.

கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது.
அரசியலில் மூத்த தலைவர் இளைய தலைவர் என்பதெல்லாம் இல்லை. அமைதியாக அவர் அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தால் நல்லது.
நீதிமன்ற வழக்கு தொடர்பாக சி.வி.சண்முகம் தான் பதில் கூறுவார். அவர் தான் எல்லா பதிலும் கூறுகிறார்.
நான் சாதாரண தொண்டன் என்னிடம் கேட்கும் கேள்விகளை பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும்.
அதிமுக – பா.ஜ.க கூட்டணி வைக்குமா என்பது குறித்தும் பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும்.
விவசாயிகள் நடத்திய கூட்டத்தை நான் புறக்கணிக்கவில்லை அதில் கலந்து கொள்ளவில்லை என தான் ஏற்கனவே கூறினேன் எனக் கூறினார் .