திருச்சியில் கராத்தே பயிற்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி .
திருச்சியில் கராத்தே மாணவ மாணவிகளுக்கு நேற்று 14/2/2025 பட்டம் மற்றும் பட்டயங்கள்( belt and certificate ) வழங்கும் நிகழ்ச்சி .
திருச்சி joan of international பள்ளியில் கராத்தே கற்றுக் கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு, பச்சை போன்ற பெல்ட்டுகள் அவரவர்கள் கற்றுக் கொண்ட பாடத்திற்கு ஏற்ப பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஜோன் ஆப் ஆர்க் பள்ளித் தாளாளர்கள் எஸ்.ஆனந்தன், கீதா ஆனந்தன், முதல்வர்கள் ஜெ. ரவி ராயன், எம்.ஜெயந்தி பயிற்சியாளர் வி. எழில் ஆகியோர் பட்டம் மற்றும் பட்டயங்களை வழங்கினார்கள்.