Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி தென்னூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ எழுச்சி மாநாடு குறித்து மாநிலத் துணைப் பொது செயலாளர் பேட்டி .

0

'- Advertisement -

திருச்சி தென்னூரில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாடு

நாளை மறுநாள் நடக்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம் சார்பாக 16- ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணி முதல் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ‘ஏகத்துவ எழுச்சி மாநாடு’ நடைபெற உள்ளது. மாநாடு குறித்து மாநாடு நடைபெறுகின்ற உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோ. அப்துல் ரஹீம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 

ஏகத்துவ எழுச்சி மாநாடு வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மதியம் 1:30 மணி முதல் மாநாட்டின் கண்காட்சி அரங்கங்கள் துவங்க இருக்கின்றது,

 

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் சகோதரர். ஆர்.அப்துல் கரீம், மாநில தணிக்கை குழு தலைவர் சகோ.எம்.எஸ் சுலைமான் மற்றும் மாநிலச் செயலாளர் சகோ.சபீர் அலி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்திருந்த “அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)” என்கிற பத்து மாத கால செயல் திட்டத்தின் இறுதியாக திருச்சி மாவட்டம் சார்பில் நடத்தப்படுகின்ற

 

இம்மாநாட்டில் திருச்சி மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த பத்து மாதங்களாக திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு பிரச்சாரங்கள் வாயிலாக இம்மாநாடு செயல் திட்டம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்ட நிர்வாகம் அனைத்து பகுதியிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

அப்பிரச்சாரத்தின் இறுதியாகவே இம் மாநாடு தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

 

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1:30 மணியளவில் துவங்க இருக்கின்ற இம்மாநாட்டின் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

 

இம்மாநாட்டின் ஏற்பாடுகள் திருச்சி மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஜாஹீர், பொருளாளர் லால் பாஷா, துணைத் தலைவர் காஜா, துணைச் செயலாளர் உமர், பிலால், கனி ஆகியோர் முன்னிலையில் மாநாடு ஏற்பாடுகள் பணிகள் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.