Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாணவர்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள சென்ட்ரல் கிச்சன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் .

0

'- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கான விடுதியில் சமைக்கும் முறையை மாற்றி அமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சென்ட்ரல் கிச்சன் என்னும் முறையை அறிமுகம் படுத்துகிறது.

இதன் மூலம் மாவட்ட தோறும் ஒரு சமையல் கூடம் என்ற அடிப்படையில் மாவட்டங்களில் உள்ள அனைத்து விடுதிகளுக்கும் ஒரே இடத்தில் உணவு சமைத்து அந்தந்த விடுதிகளுக்கு கொண்டு செல்லும் முறையை சென்ட்ரல் கிச்சன் முறை என தமிழ்நாடு அரசால் கூறப்படுகிறது.

 

இத் திட்டம் அமலுக்கு வந்தால் மாணவர்களின் அன்றாட உணவு முறையிலும் அவர்களின் கால நெறிமுறைகளிலும் பல்வேறு சிக்கல் ஏற்படும், அத்தோடு மாணவருக்கு அளவு சாப்பாடு என்ற கட்டுப்பாடும் ஏற்படக்கூடும். எனவே மாணவர்களுக்கு விரோதமாக தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டுள்ள விடுதிகளுக்கான சென்ட்ரல் கிச்சன் திட்ட முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்க தலைமையில் வருகின்ற 26 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம் மாநில குழு திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதன் ஒரு பகுதியாக இன்று 13 /2 /2025 திருச்சி மாநகரில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சூர்யா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி .கே .மோகன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.