12 மணி நேரத்தில், மூன்று தொடர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட திருச்சி காவேரி மருத்துவமனையின் சாதனை.
12 மணி நேரத்தில், மூன்று தொடர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட திருச்சி காவேரி மருத்துவமனையின் சாதனை.
காவேரி மருத்துவமனை, திருச்சி, அதன் கன்டோன்மென்ட்
மற்றும் தென்னூர் மையங்களில், மூளைச்சாவு அடைந்து உடலுறுப்பு தானம் அளித்த நபர்களிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகங்களை பயன்படுத்தி மூன்று தொடர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. 12 மணி நேரம் நீடித்த இந்த மாரத்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகல் மருத்துவ உலகில் ஓர் புதிய மைல்கல் ஆகும். சிறுநீரக தானம் செய்வதற்காக தங்கள் குடும்பத்தினர்களில் தகுதி பெற்றவர்கள் யாரும் இல்லாத நிலையில் இருந்த மூன்று சிறுநீரக நோயாளிகளுக்கு, உடல் உறுப்பு தானத்தின் மூலம் நடந்த இந்த சாதனை தொடர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மறுவாழ்வு அளித்துள்ளது,” என்று கூறியுள்ளார் இந்த அறுவை சிகிச்சைகளின் சிறுநீரக மாற்று மருத்துவ நிபுணர் (Renal Transplant Physician) டாக்டர் சக்தி செல்வகுமார், M.D (பொது மருத்துவம்), DrNB (சிறுநீரக மருத்துவம்), FASN (USA), Fellow Glomcon (USA), MNAMS.
ஒற்றுமையின் வெற்றி
டிசம்பர் 15 ஆம் தேதி, இரவு 11 மணிக்கு மேல், மதுரையில் மூளைச்சாவு அடைந்த இரு நன்கொடையாளர்கள் குறித்து காவேரி மருத்துவமனைக்கு தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்திலிருந்து (TRANSTAN) தகவல் வந்தது. தொடர்ந்து, இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகள் பெறுநர்களாக அடையாளம் காணப்பட்டனர்:
1.சென்னையைச் சேர்ந்த 52 வயது I.T நிபுணர்
2. திருச்சியைச் சேர்ந்த (தனது குடும்பத்தினரால் ஆதரிக்கப்படும்) 46 வயது விதவை
3. பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான பெண்
குழுப்பணி மற்றும் நிபுணத்துவம்
இவ்வளவு குறுகிய நேரத்தில் மூன்று மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்படிவேண்டியிருந்தது.
உடல் உறுப்பு மீட்பு பயணம் :
மூன்று நோயாளிகளின் இரத்த மாதிரிகள் நன்கொடையளர்களுடன் பொருத்தி பார்த்த பின் மதுரையில் இருந்து திருச்சிக்கு இரண்டு ஆம்புலன்ஸ்களில் சிறுநீரகங்கள் கொண்டு வரப்பட்டன.
அறுவை சிகிச்சை குழுக்கள்:
சிறுநீரக அறுவை சிகிச்சைத்துறை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் எஸ்.செந்தில் குமார் தலைமையில், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சசிகுமார் உதவியுடன் கன்டோன்மென்ட் மற்றும் தென்னூர் மையங்களில் இரண்டு அறுவை சிகிச்சை குழுக்கள் ஒரே நேரத்தில் பணியாற்றின.
மயக்கவியல் பராமரிப்பு: மயக்கவியல் துறை தலைவர் டாக்டர். செந்தில் குமார் காளியண்ணன் தலைமையிலான மூன்று குழுக்கள், அறுவை சிகிச்சையின் போது அதிக ஆபத்து நேரும் வாய்ப்புள்ள மூன்று நோயாளிகளுக்கும் நிபுணத்துவம் நிறைந்த சமநிலையான கவனிப்பை உறுதி செய்தனர்.
மாற்று சிகிச்சை சமயம்:
பிற்பகல் 12 pm – 4 pm: முதல் மாற்று அறுவை சிகிச்சை காவேரி கன்டோன்மென்ட் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்றது
4 pm – 8 pm: காவேரி கன்டோன்மென்ட் மருத்துவமனையில் இரண்டாவது மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது
அதே சமயம் மூன்றாவது மாற்று அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையின் தென்னூர் மையத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மூன்று நோயாளிகளும் டயாலிசைசில் இருந்து விடுதலை பெற்று பூரண, குணமடைந்தனர். இந்த அறுவைச் சிகிச்சையின் வெற்றி அவர்களது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
உறுப்பு தான விழிப்புணர்வு:
தங்களுக்கு நேர்ந்திருந்த மிகப்பெரும் சோகத்தின் இடையிலும் அந்நியர்களின் உயிரை காக்க முன்வந்த மதுரையைச் சேர்ந்த இரண்டு நன்கொடையாளர் குடும்பங்கள் மூலம் தான் இந்த அற்புதம் சாத்தியமானது. Kauvery KODAI (Kauvery Organ Donation Awareness Initiative) உறுப்புதான விழிப்புணர்வு முயற்சியை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது..
இது ஒரு புதிய மைல்க்கல்!
குழுப்பணி, அர்ப்பணிப்பு மற்றும் மருத்துவ நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் டி செங்குட்டுவன் கூறினார்.
“உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தையும், உயிர்களைக் காப்பதில் அது ஏற்படுத்தும் அசாதாரணமான தாக்கத்தையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வெவ்வேறு சமூக படிநிலைகளை சேர்ந்த இந்த மூன்று நோயாளிகளுக்கும் ஒரே சமமான தரமான சிகிச்சை வழங்கி, உன்னதமான சாதனை புரிந்த, எங்கள் குழுவைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முன்னேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.