Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி

0

உலகப் புற்றுநோய் தினத்தையொட்டி திருச்சியில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து, உலகப் புற்றுநோய் தினம் 2025-ஐ முன்னிட்டு (தனித்துவத்தால் ஒன்றிணைவோம்) என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு பேரணியை மிக பிரமாண்டமாக நடத்தியது. பேரணியை தலைமை தாங்கி முதன்மை விருந்தினராக டாக்டர் குமரவேல் முதல்வர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், நிகழ்ச்சியில் டாக்டர் அர்ஷியா பேகம்,துணை முதல்வர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி அவர்கள் மற்றும் டாக்டர் அருண்ராஜ் அரசு மருத்துவக் கண்காணிப்பாளர் கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவப் பல்கலைக்கழக மாணவ மாணவிகள்
மற்றும் முதல்வர் டாக்டர்.ரேகா, மாரியம்மன் செவிலியர் கல்லூரி முதல்வர் முனைவர்.
ரூபா மற்றும் மாணவ மாணவிகள், சாவைட் செவிலியர் கல்லூரி முதல்வர் மெட்டில்டா மற்றும் மாணவ மாணவிகள், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின்
இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் மாணவ மாணவிகள்,பெரியார் மணியம்மை மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை மற்றும் மாணவ மாணவிகள், பிங்க் கிராஸ் சொசைட்டியைச் சார்ந்த தன்னார்வலர்கள், ரோஸ் கார்டன் புற்றுநோய் அறக்கட்டளை
உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முன்னதாக பேரணியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை
வழங்கினார் டாக்டர்.க கோவிந்தராஜ் நிர்வாக இயக்குனர் ஹர்ஷமித்ரா மருத்துவமன அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல் இம்மாபெரும் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார் இப்பேரணி அரசு மருத்துவ கல்லூரியில் தொடங்கி கோர்ட்டு வழியாக அண்ணல் காந்தி மெமோரியல் அரசு மருத்துவமனையை வந்தடைந்தது.
இப்பேரணியில் கலந்து கொண்டு அனைத்து மாணவ மாணவிகளும் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு வாசகங்கள் உள்ள பதாகைகளை ஏந்தி சென்றனர். வேண்மைப்புணர்வு பேரணி புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை மையமாற்று கொண்டு மக்களுக்கு ஒப்புகளால் ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது. புற்றுநோய் ஒரு உயிருக்கு ஆபத்தான நோயாக இருந்தாலும், அதற்கான உரிய முன்னேற்பாடு மற்றும் சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெற முடியும் என்பதையும், நோயை தடுப்பதற்கான முறைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதே இந்த பேரணியின் நோக்கம்.
உலகளவில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், அனைவரும் தங்களுடைய உடல்நலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், சரியான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் புற்றுநோயை தடுப்பது மிகவும் முக்கியம் என்பதையும் இந்த பேரணி வலியுறுத்தியது. இம்மாபெரும் பேரணி ஆனது அண்ணல் காந்தி மெமோரியல் அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது.

வெற்றிகரமாக முடிந்த இம்மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவர்களை பாராட்டி நிறைவுறை ஆற்றினார் டாக்டர்.E. அருண்ராஜ் அவர்கள், அரசு மருத்துவக் கண்காணிப்பாளர், கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி. மேலும் பேரணியில் கலந்து கொண்ட அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களையும் பாராட்டி கௌரவம் செய்யப்பட்டது. நிறைவாக டாக்டர் க. கோவிந்தராஜ் அவர்கள் நன்றி யுரையாற்றினார்
இம்மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி உலக சுகாதார மையத்துடன் கூட்டமைப்பில் உள்ள யு ஐ சி சி எனப்படும் யூனியன் இன்டர்நேஷனல் கண்ட்ரோல் ஆப் கேன்சர் என்ற அமைப்பில் திருச்சியிலேயே முதன் முதலாக உலகளாவிய அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது திருச்சிக்கு பெருமை சேர்க்கிறது மேலும் தமிழகத்தில் இரண்டாவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற பெருமையும் மாபெரும் பேரணி ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.