Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கடலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டராக கணவன், மனைவி நியமனம் .

0

'- Advertisement -

கடலூர் மாவட்டத்தில் கணவர் கலெக்டராகவும், மனைவி கடலூர் மாநகராட்சி ஆணையராகவும் ஏற்கனவே பதவி வகித்து வரும் நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் கணவர் கலெக்டராகவும், மனைவி கூடுதல் கலெக்டராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஓரிரு நாட்களில் இருவரும் பொறுப்பேற்க உள்ளனர். கணவர் விழுப்புரம் மாவட்ட கலெக்டராகவும் மனைவி விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராகவும் பொறுப்பேற்க இருப்பது விழுப்புரம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்தவர் பழனி. சமீபத்தில் கலெக்டர்கள் பணியிட மாற்றத்தின் போது பழனியும் இடமாற்றம் செய்யப்பட்டார். அதாவது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் காலியான விழுப்புரம் மாவட்ட கலெக்டர் இடத்திற்கு ஷேக் அப்துல் ரகுமான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷேக் அப்துல் ரகுமான் நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்ற உள்ளார். இதேபோல் இவரது மனைவியான பத்மஜாவும் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் பதவிகளை கணவன் மனைவியான ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் பத்மஜா அலங்கரிக்க உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக (ஊரக வளர்ச்சித் துறை) இருந்த ஸ்ருதஞ் ஜெய்நாராயணன் என்பவர், தமிழக அரசின் மின் ஆளுமை முகமை கூடுதல் இயக்குனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராக (ஊரக வளர்ச்சித் துறை) பதவிக்கு பத்மஜா நியமிக்கப்பட்டுள்ளார். பத்மஜா தமிழக அரசின் பொதுத்துறை துணை செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தின் கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் பதவிகளை கணவன் – மனைவி இருவரும் அலங்கரிக்கின்றனர். தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஷேக் அப்துல் ரகுமான், விழுப்புரம் மாவட்டத்தின் 23-வது கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஷேக் அப்துல் ரகுமானின் சொந்த ஊர் சென்னை ஆகும். இவரது பெற்றோர் அரசு அதிகாரிகள் ஆவர். இவருக்கு இரண்டு சகோதரிகள்.

சென்னையில் உள்ள பள்ளியில் தான் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செயின்ட் ஜான் பள்ளியில் படித்தார். இதன் பின்னர் சென்னை கிண்டியில் உள்ள காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் கல்லூரியில் பி இ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பை படித்தார். 2013 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த இவர், ஓராண்டு கொச்சியில் ஐ ஏ எஸ் பயிற்சியை பெற்றார். தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

ஷேக் அப்துல் ரகுமானின் மனைவி பத்மஜா ஆந்திராவை சேர்ந்தவர் ஆவார். பத்மஜாவும் 2017 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர் தான். ஒரே ஆண்டில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இருவரும் தற்போது ஓரே மாவட்டத்தில் விழுப்புரத்தில் கலெக்டர், கூடுதல் கலெக்டர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கனவே கடலூர் மாவட்ட கலெக்டராக சிபி ஆதித்யா செந்தில் குமாரும், கடலூர் மாநகராட்சி ஆணையராக

அவரது மனைவி அனுவும் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.