Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க கொடி ஏற்றம்.

0

'- Advertisement -

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இதில், தைப்பூச திருவிழா, பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மரக் கேடயத்தில் மேள தாளத்துடன் அம்மன் கொடி மரத்தின் முன் காட்சியளித்தார். காலை 7.30 மணிக்கு தங்க கொடி மரத்தில் அம்மன் உருவம் பொறித்த துணி கொடியை கோவில் பூசாரிகள் ஏற்றினர்.

Suresh

தொடர்ந்து கயிறு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு அம்மன் மர கேடயத்தில் வலம் வந்து கோயிலை வலம் வருவார்.

இவ்விழாவையொட்டி, அம்மன் காலை பல்லக்கு மற்றும் காளை வாகனம், மர அன்ன வாகனம், மர மாட்டு வண்டி, மர யானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம் என பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

மாலையில். 10-ம் நாளான 11-ம் தேதி காலை கண்ணாடி பல்லக்கில் அம்மன் தைப்பூசத்திற்கு புறப்பட்டு நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடதிருகாவிரியை சென்றடையும்.

அன்று மாலை தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். அன்று இரவு 10 மணி முதல் 11 மணி வரை ரங்கம் ரங்கநாதரிடம் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து, அதிகாலை 5 மணி வரை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அன்று காலை, 8 மணிக்கு, வடக்கு காவிரியிலிருந்து கண்ணாடிப் பல்லக்கில் அம்மன் வந்து, தேரோட்டத்தை தரிசனம் செய்து, இரவு, 11 மணிக்கு கோவில் வளாகத்தை வந்தடைவார்.

பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விழாக் கொடி இறக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.