Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம் 2025 இலச்சினை முதல்வர் வெளியிட்டார்.

0

'- Advertisement -

Suresh

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (1.2.2025) தலைமைச் செயலகத்தில், சிவகிரி மடம் மற்றும் சிவகிரி ஆசிரமம் சார்பில் இங்கிலாந்து நாட்டில் நாளை மே 2 முதல் 4 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள “ஸ்ரீ நாராயண குரு நல்லிணக்கம் 2025″ (Sree Narayana Guru Harmony 2025) நிகழ்ச்சிக்கான இலச்சினையை (logo) வெளியிட்டார்.

இந்நிகழ்வின் போது, சிவகிரி மடத்தின் சர்வதேச அமைப்புச் செயலாளர் சுவாமி வீரேஸ்வரானந்தா, இங்கிலாந்து நாட்டின் சிவகிரி ஆசிரமத்தின் தலைவர் பைஜு பாலக்கல், செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் கணேசன் சிவன், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.