Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணாவின் 56வது நினைவு நாள்: அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்.திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு.

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

Ad banner

அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க

பேரறிஞர் அண்ணா அவர்களின் 56- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்

வருகின்ற 03.01.2025, திங்கட்கிழமை காலை 10 மணி அளவில்
திருச்சி சிந்தாமணி அருகே அமைந்துள்ள அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

அதுசமயம்
மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.