Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை மின் வினியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள் விபரம்….

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் நாளை 6 மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

Suresh

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை 28.1.25 (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்வே ஸ்டேஷன்ரோடு, கிழக்கு உத்திரவீதி, மேற்கு உத்திரவீதி, வடக்கு உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, வடக்கு சித்திரைவீதி, கிழக்கு சித்திரைவீதி, தெற்கு சித்திரைவீதி, மேற்கு சித்திரைவீதி, அடையவளஞ்சான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம், திருவானைக்காவல் பகுதி, சன்னதிவீதி, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன் ரோடு,

அம்பேத்கர்நகர், பஞ்சக்கரைரோடு, அருள்முருகன்கார்டன், ஏ.யு.டீ.நகர், ராகவேந்திராகார்டன், காந்திரோடு, டிரங்க்ரோடு, சென்னை பைபாஸ்ரோடு, கல்லணை ரோடு, கீழகொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வரர்நகர், தாகூர்தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக்போஸ்ட் பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.” என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.