Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி தலைமையில் புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் பொதுமக்கள் சாலை மறியல் .

0

'- Advertisement -

திருச்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் மாநகராட்சி உடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் சாலை மறியல் .

குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட் டம் நேற்று நடைபெற்றது.

இதில், புங்கனூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியுடன் சேர்க்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கூறினர். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரி வித்ததால் மக்கள் அனைவரும் புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புங்கனூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் கார்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர் .

Suresh

காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் ராம்ஜி நகர் இன்ஸ்பெக்டர் வீரமணி உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .
அதே போல் அதவத்தூர், வயலூர் ஊராட்சியை மாநகராட் சியுடன் இணைப்பதை ரத்து செய்யக்கோரி அதவத்தூர், வயலூர் கிராம மக்கள் கிராம சபை கூட் டத்தில் வாக்குவாதம் செய்தனர்.

மணிகண்டம் வட்டார வளர்ச்சி
அலுவலர்கள் அண்ணாதுரை, அகஸ்டின் இமானுவேல் தேவனேசன் ஆகியோர் புங்கனூர், அதவத்தூர், வயலூர் கிராமசபை கூட்டங்களில் கலந்துகொண்ட மக்களிடம் திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என்ற கோரிக்கையை பரிந்துரை செய்வதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் புங்கனூர் மற்றும் அதவத்தூர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.