திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் உள்ள மாவடிகுளத்தில் உள்ள மீன்கள் பல நாட்களாக இறந்து கிடந்தன.
அந்த மாவடிகுளத்தை சுற்றி சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு துர் நாற்றத்தின் விளைவாக நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவியது .
இதனைத் தொடர்ந்து பாஜகவின் அரியமங்கலம் மண்டல் தலைவரான பாலகுமார் அவர்களிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் மாவட்ட தலைவரான ஒண்டிமுத்து அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக பாஜகவை சேர்ந்த மாநில செயலாளர் ஜெபி என்கிற ஜெயராம் பாண்டியன், இளைஞரணி மாநில பொதுசெயலாளர் கெளதம், மாநில செயற்குழு உறுப்பினர் குரு, மாவட்ட செயலாளர் ரவிக்குமார், முன்னாள் மண்டல் தலைவர் சண்முகவடிவேல், அரியமங்கலம் மண்டலை சேர்ந்த ஆனந்த், குரு, ஜெயச்சந்திரன், முருகபாண்டியன்,சந்திரசேகர், துர்கா, செல்லமணி, முத்துராம் மற்றும் பாஜக மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் என ஏராளமானோர் ஒன்று திரண்டு அந்த மீன்கள் முதலில் ஏன் இறந்தது? அந்த தண்ணீரில் என்ன கலக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய அந்த குளத்தின் தண்ணீரை ஆய்வுக்கு எடுத்து செல்லபட்டிருக்கிறது.
மாவடி குளத்தில் மீன்கள் இறந்து இருந்து வருகிறது என்ற தகவல் அறிந்தவுடன் திருச்சி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து இந்த ஆய்வு பணியை மேற்கொண்டார்.
ஆளும் கட்சி திமுக அமைச்சர் தொகுதியில் அமைச்சரே கண்டுகொள்ளாத நிலையில் பாஜகவினர் எடுத்த நடவடிக்கைகளை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி சென்றனர் .
அந்த மாவடி குளம் சுமார் 147 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்து நீர் பாசனத்தை நம்பி பல ஆயிரம் விவசாயிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .