விடிய விடிய பெய்த சாரல் மழையால் ஊட்டியாக மாறியது திருச்சி.இந்தப் பனிமூட்டம் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை.
விடிய விடிய பெய்த சாரல் மழையால் ஊட்டியாக மாறியது திருச்சி .
குளிரினால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
திருச்சியில் கடந்த நவம்பர் மாதம் முதல் பலத்த மழை பொழிந்த நிலையில், மழை நின்றது முதல் பனி கொட்ட தொடங்கியது.
இதனால் திருச்சி மாவட்ட மக்கள் கடந்த சில மாதங்களாக குளிர்ந்த சீதோஷன் நிலையை அனுபவித்து வருகின்றனர். மேலும் தினசரி காலை வேலைகளில் பனிமூட்டம் அதிகரித்து சாலைகளை மறைந்து வரும் காட்சிகளை நம்மால் தினமும் காண முடிந்தது. இதனால் தினமும் அதிகாலை பணிக்கு வெளியே செல்லும் மக்கள் கட்டாயம் ஸ்வெட்டர் அணிந்து தான் பணிக்கு செல்கின்றனர். அந்தளவிற்கு பனிமூட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் நேற்று மதியம் ஒருசில இடங்களில் திடீரென பெய்த மழையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். திருச்சி மாநகரில் கன்டோன்மென்ட், திருவரங்கம், தில்லைநகர், கருமண்டபம், கேகேநகர், சுப்ரமணியபுரம், பொன்மலை , உறையூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் இடைவிடாது சாரல் மழை பெய்தது. இந்த மழை இன்று மாலை வரை விட்டுவிட்டு தூரிக்கொண்டே இருந்தது .
இந்த மழையால் ரெயின்கோட் எடுத்துவர மறந்த மக்கள் முழுவதுமாக நனைந்தபடியே சென்றனர். மேலும் மழையால் சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலையில் இரு சக்கர வாகனம் ஓட்டி செல்வோர் குளிரில் நடுங்கியபடியே தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு சென்றனர்.
இது ஒருபுறம் இருக்க உணவு பிரியர்கள் கூட்டம் பனிக்கு இதமாக டீ குடிக்க டீக்கடை களுக்கு படையெடுத்தனர். மேலும் அங்கு சூடான பலகாரங்கள் அனைத்தும் மளமள வென விற்றுதீர்ந்தது. ஆகமொத்தம் திருச்சி மாவட்டம் முழுவதும் மக்கள் குளிர்ந்த சீதோஷ்ன நிலையை அனுபவித்து வருகின்றனர்.
நேற்று இரவு முழுவதும் மழை விட்டு விட்டுபெய்து வந்தது.இதனால் இன்று விடிய காலை முதல் கடும் பணி காணப்பட்டது.பொதுவாக ஆறு மணிக்கு விடிந்து விடும் ஆனால் இன்று ஏழு மணி அளவில் தான் இருள் நீங்கி வெளிச்சம் வந்தது இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் கடும் குளிரில் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கினார்கள்.இன்று காலை முதல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேகமூட்டமாக காணப்பட்டது. மேலும் பணிப்பொழிவு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது இதனால் திருச்சி மாவட்டம் ஊட்டி கொடைக்கானலை போன்று குளிர்ந்த காற்று பனி உடன்காட்சியளித்தது.
பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் இன்று முடங்கி கிடந்தனர்.
இதனால் சாலைகளில் குறைந்த அளவு வாகனங்கள்சென்றது.
மேலும் குளிர்காலத்தில் அதிகளவில் நோய்தொற்று பரவும் என்பதால் மக்களை நன்கு காய்ச்சிய குடிநீரை மட்டுமே குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த பனிமூட்டம் முதியவர்களை காட்டிலும் அதிகம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களையே அதிகம் பாதிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஞானவேல் கூறியதாவது:-
இந்த பனி காலத்தில் பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த திடீர் பனி அவர்களை பெரிதும் பாதிக்கும். காய்ச் சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப் வெளியே அனுப்பும் போதும் பும் போதும், நன்கு அவர்களது காதுகளை மூடியபடி
மப்ளர் கட்டி அனுப்ப வேண்டும், அவர்களுக்கு நன்கு காய்ச்சிய குடிநீர் மட்டுமே வழங்க வேண்டும். அதோடு இந்த பனி காலத்தில் அதிக எண்ணையால் வறுத்த திண்பண்டங் களை தராமல் எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவுகளை மட்டுமே வழங்க வேண்டும். நிறைய காய்கறிகள் நிறைந்த சத்தான உணவாக வழங்க வேண்டும். பெரியவர் களும் தினசரி நன்கு காய்ச்சிய குடிநீரை குடிப்பது நல்லது.
இவ்வாறு டாக்டர் ஞானவேல் கூறினார்.
திருச்சி மாவட்டத்தில் மழை அளவு முழு விவரம் பின்வருமாறு:-
திருச்சி மாவட்டத்தில் கல்லக்குடி 4.2 மிமீ, லால்குடி 12.6 மிமீ, தேவி மங்கலம் 8.6 மிமீ, சமயபுரம் 18 மிமீ சிறுகுடி 10.2 மிமீ, பொன்மலை 7, மிமீ, திருச்சி ஜங்ஷன் 12,8, மிமீ மொத்தம் மாவட்டத்தில் 193.2 மிமீ மழை பதிவாகி உள்ளது.
சராசரியாக 8.05 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புள்ளம்பாடியில் 29.8 மிமீ மழை பதிவாகி உள்ளது.