தமிழ்நாடு சேமநலநிதி ரூ.20 லட்சமாக உயர்த்த கோரி திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் மனு .
தமிழ்நாடு சேமநலநிதி ரூ.20 லட்சம் ஆக உயர்த்த கோரி மனு.
பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு தலைவர்
பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு துணைத் தலைவர் வி. கார்த்திகேயன் ஆகியோரிடம் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக செயலாளர்
பி.வி.வெங்கட் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :-
தற்போது தமிழ்நாட்டில் உள்ள வழக்கறிஞர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் சேமநல நிதி ரூபாய் 10 லட்சமாக உள்ளதை உயர்த்தி ரூபாய் 20 லட்சம் ஆக வழங்குவதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் வேண்டுகோள் கொடுக்கப்பட்டது.