திருச்சியில் பெயின்டர் தூக்கு போட்டு தற்கொலை. குடிப்பழக்கம் காரணமா ?

திருச்சி, தென்னுார், சங்கீதபுரத்தைச் சேர்ந்தவர் அன்சாரி (வயது 37), பெயின்டர். மேலும் அன்சாரி குடிபழக்கத்திற்கு அடிமையானவர்.
குடிபழக்கத்திலிருந்து மீண்டு வர அன்சாரி சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன.9ம் தேதி) இவர் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது மனைவி கிறிஸ்டினா மேரி (வயது 23) அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.