திருச்சி அருகே பரபரப்பு :
இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய
செயலாளர் அடித்துக்கொலை
நாய் குரைத்த விவகாரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் வெறிச்செயல்.
திருச்சி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அடித்து கொலை செய்யப்பட்டார் இது குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர்.
இவரது பக்கத்து வீட்டுக்காரர் நெய்கிருஷணன். நாய் குரைத்தது தொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
வாய் தகராறு முற்றி அடிதடி ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த முத்து கிருஷ்ணன் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.