Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் : இன்று வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம்.

0

இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலம்…

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்; இன்று பகல் பத்து, பத்தாம் திருநாள்:

நாச்சியார் திருக்கோலம் (மோகினி அலங்காரம்)
நம்பெருமாள் வெண்ணிற பட்டு புடவை அணிந்து;
வலது திருக்கையில் தங்கக் கோலக்கிளி தாங்கி, இடது திருக்கை தொங்க விட்டுக் கொண்டு , கம்பீரமாக அமர்ந்த திருக்கோலத்தில் –
சௌரிக் கொண்டை அணிந்து – அதில் கலிங்கத்துராய் , நெற்றி பட்டை , முத்து பட்டை சாற்றி; காதில் வைர மாட்டல், வைரத் தோடு அணிந்து : மூக்குத்தி அணிந்து; திருமார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன்மேல் தாயாரின் திருமாங்கல்யம், அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, தங்க பூண் பவழ மாலை, காசு மாலை அணிந்து;
இடது திருக்கை முழுவதும் தங்க வளையல்கள், அரசிலை பதக்கம், பவழ வலையல், தாயத்து சரங்கள் : திருவடியில் தங்க சதங்கை, தண்டைகள்.

 

பின் சேவையில் – ஏலக்காய் ஜடை தாண்டா சாற்றி,அதன் மேல் கல் இழைத்த ஜடை நாகத்துடன் சேர்ந்த சிகப்பு கெம்புக்கல் ஜடை அணிந்து; ராக்கொடி அணிந்து; திருக் கைகளில் புஜ கீர்த்தி சாற்றி ; அரைச்சலங்கை இடுப்பில் வலைவாக சாற்றி;
சூர்ய பதக்கம்
என ஏராளமான திருவாபரணங்கள் சாற்றி வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.