Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எனக்கு பின் தான் விஜய் என கூறும் புஸ்ஸி ஆனந்த். விஜய்க்கு 100 % உண்மையுடன் இல்லை. பரபரப்பு ஆடியோவால் தவெக நிர்வாகிகள் அதிர்ச்சி.

0

 

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொறுப்பாளர்கள், எதிர்கால செயல்முறை உட்பட பல்வேறு விஷயம் குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி பிரச்சனை என சர்ச்சை ஆடியோ வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக்கு கழகத்தின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி. இவர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகளை கண்டித்து பேசிய அதிர்ச்சி ஆடியோ வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தனது வியூகத்தின் வாயிலாக மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற வாதத்தை முன்வைத்து, அன்புமணியின் பெயரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்ந்ததில் ஜான் ஆரோக்கியசாமிக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் கவனிக்கப்படுகிறது.

அதாவது, தற்போது வெளியாகியுள்ள ஆடியோ ஒன்றில் பேசும் ஜான், “கட்சியின் கட்டமைப்பை ஆனந்த் செயல்பாடுகள் உடைகிறது. ஆனந்த் ஒரு விஷயத்தை கூறாமல் அது வெளியே செல்லப்போவது இல்லை. முதல்வர் வேட்பாளர் விஜய் என்றால், அவரை மையப்படுத்தியே அனைத்தும் நடத்தப்பட வேண்டும். ஆனால், புஸ்சியின் செயல்பாடுகள் இங்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவரை மையப்படுத்தி நடக்க கூடாது. இதனை நான் இருவரிடமும் சொல்லிவிட்டேன்.
துரைமுருகனை ஸ்டாலின் இடத்தில வைக்க முடியுமா? ஜெயலலிதா இடத்தில சசிகலாவை வைக்க முடிமா? முதல்வர் வேட்பாளர் மட்டுமே முக்கியமானவர்.

பிற கட்சியின் பொறுப்பாளர்கள், தலைவரலாக இருந்தாலும், அவர்கள் இரண்டாவது கட்டமே. ஆனால், இங்கு புஸ்சியை பெரிய அளவு என பயன்படுத்துகின்றனர். சிறிய விசயத்திற்கு கூட புஸ்ஸி தான் அனுமதி கொடுக்கிறார். அவர் தேர்வு செய்து அனுப்பாமல் நிர்வாகிகளுக்கு எப்படி புகைப்படம் போகும்?.

அன்புமணி விஷயத்தில், டாக்டர் ராமதாஸின் புகைப்படத்தையே வெளியே எடுத்தவன். தந்தையாக இருந்தாலும், தாயாக இருந்தாலும் முதல்வர் வேட்பாளருக்கு மட்டுமே கவனம் இருக்க வேண்டும். பிறரை அங்கு வைக்க கூடாது. விஜயை எம்.ஜி.ஆர், அண்ணா, ஜெயலலிதா, கருணாநிதி என அந்த கட்டமைப்பில் கொண்டு வந்தால், கோமாளி கூட்டத்தை நடுவில் கொண்டு வருகிறார்கள். இது மிகப்பெரிய தவறு. தலைவரை வைத்து நிழலில் பிறர் இருக்கலாம். தலைவரையே நிழலாக மாற்ற கூடாது. கற்பனையிலும் இதனை சிந்திக்க இயலாது. லெட்டர் பேடு கட்சிகள் கூடாது அனுமதி கொடுக்காது.

எடப்பாடி, ஓ.பி.எஸ், அன்புமணி, சசிகலா, திருமாவளவன் ஆகியோர் தோல்வியை சந்திப்பது எதனால்?. அவர்கள் சமநிலைக்கு ஏற்றவர்கள் இல்லை. ஆனால், விஜய் அந்த இடத்தை பிடிக்க முடியும். விஜயை வேண்டி இரத்ததானம் செய்வது ஏன்? பாரபட்சமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபர் அவர். அவரை இப்படி மாற்ற முயற்சிப்பது நல்லது. இன்றைய நிலை புஸ்ஸி தான் எல்லாமே என்ற நிலை வரும். அது வந்தால் 2 % வாக்கு தேறாது. நான் 30% வாக்கு எதிர்பார்த்தால், இவர்களின் நிலை அதற்கு இடம் கொடுக்காது.

நான் விஜயிடம் நேரடியாக சொல்வதை, அவரும் புஸ்ஸியிடம் கூறிவிடுகிறார். புஸ்ஸியும் ஒருசில விஷயங்களை போட்டு வாங்குகிறார். விஜய் கூறினால் நடக்க வேண்டிய விஷயம், புஸ்ஸி சொல்லி கேட்க்கும் நிலை மாறினால், மிகப்பெரிய வருத்தம் தான் தவெக தலைவர் விஜய்க்கு எஞ்சி இருக்கும்.

புஸ்ஸி ஆனந்தும் முதலில் தனக்கு, பின் விஜய்க்கு என்று இருக்கிறார். அவர் விஜய்க்கு 100 % உண்மையுடன் இல்லை” என பேசினார்.

தற்போது
இந்த ஆடியோ தவெக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை தந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.