யாதவ தொழிலதிபர் மீது தாக்குதல். வன்கொடுமை சட்டத்தினை தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வருக்கு பா.மு.க நிறுவனத் தலைவர் பாரத ராஜா யாதவ் வேண்டுகோள்.
பள்ளிக்கரணை தொழிலதிபர் கமலஹாசன் யாதவை தாக்கிய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்கொடுமை சட்டத்தினை தவறாக பயன்படுத்திட எவர் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் டி.ஜி.பி ஆகியோரை
பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்
பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை பள்ளிக்கரணையில் வீடுகளை கட்டி விற்பனை செய்யும் நிறுவனத்தினை நடத்தி வருபவர் கமலஹாசன்.
இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு 7 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கியுள்ளது .

கமலஹாசன் தன்னை தாக்கிய நபர்கள் குறித்த வீடியோ ஆதாரத்தோடு கொடுத்த புகாரின் பேரில் பள்ளிக்கரணை காவல் நிலைய போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிந்து ஒருவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்திருந்தாலும் தலைமறைவான
6 நபர்களும் தொடர்ந்து கமலஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தலைமறைவாக உள்ள 6 பேரும் சேர்ந்து சாதிய அரசியலில் உள்ள சிலரை காவல் நிலைத்துக்கு அனுப்பி வைத்து
தாக்குதலுக்குள்ளான
கமலஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய சொல்லி பிரச்சினை செய்கிறார்களாம்.
வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தும்
சம்பந்தமே இல்லாமல் சிலர் வன்கொடுமை சட்டத்தினை கையிலெடுத்து மிரட்டி பார்க்கின்றனர்.
அப்படி ஏதேனும் மீண்டும் கமலஹாசனுக்கு எவராயினும் எந்த வழியில் இனி தொல்லை கொடுக்க முன் வந்தால் கமலஹாசனுக்கு ஆயர்குல சமூகம் உடனடியாக கடுமையான போராட்டத்தில் குதிக்கும்.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் ,தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜூவால் அவர்களும் கமலஹாசனை தாக்கிய அனைவரும் மீது கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையிலடைக்கவும்
வன் கொடுமை சட்டத்தினை தவறாக பயன்படுத்திட எவர் முன் வந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்
என பாரதராஜா வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியுள்ளார் .