சென்னை அசோக் நகரில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான்.
சிறுவன் அருகில் உள்ள வீட்டில் டியூசன் பயின்று வந்துள்ளான்.

இந்நிலையில், சிறுவன் திடீரென மாயமான இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை தேடி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுவன் பேசி வந்த நபர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், சிறுவன் பாண்டிச்சேரியில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் உடனடியாக பாண்டிச்சேரிக்கு சென்று சிறுவனை மீட்டனர்.
அப்போது சிறுவனுடன் 22 வயது இளம் பெண்ணும் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த இளம் பெண் சிறுவனின் காதலி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் இளம்பெண்ணை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். விசாரணையில், இளம்பெண் தனது அக்காவிடம் டியூஷன் படிக்க வந்த 15 வயது சிறுவனை தனது காதல் வலையில் விழ வைத்து பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தியதாக தெரியவந்து உள்ளது.
வெறும் 15 வயது மட்டுமே ஆன சிறுவனிடம் காதலிப்பதாக கூறி காம வலையில் சிக்க வைத்து படிப்பை வீணாக்கிய இது போன்ற பெண்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என சிறுவனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர் .