பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய திமுக ஆட்சியை கண்டித்து நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
அதிமுக அமைப்பு செயலாளர்,
நாமக்கல் மாவட்ட செயலாளர் பி.தங்கமணி அவர்கள் அறிவுறுத்தலின்படி…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியை கண்டித்து..
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நாளை 30.12.2024 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதுசமயம்
மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.