டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி அன்னதானம் வழங்கினார் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
திருச்சி தில்லைநகர் பகுதி, வர்த்தக அணி மற்றும் மகளிர் அணி சார்பாக டிடிவி தினகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
தில்லைநகர் பகுதி செயலாளர் கருப்பையா அவர்கள் ஏற்பாட்டில், மாவட்ட துணைச் செயலாளர் தன்சிங் தலைமையில்,
திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள விழியிழந்தோர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
பிறந்தநாள் விழாவின் தொடர்ச்சியாக, தில்லைநகர் பகுதி கழகச் செயலாளர் கருப்பையா தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கல்லணை குணா ஏற்பாட்டில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன்
திருச்சி வண்ணாரப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் 30 அடி உயர எஸ்.எஸ்.கொடி மரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியினை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
இதே போல், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தா ஏற்பாட்டில்,
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் காலேஜ் அருகில் உள்ள சாந்தி வில்லா முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.