Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் செல்போனில் அதிக நேரம் செலவிடாதே என கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை.

0

'- Advertisement -

Ad banner

கல்லுாரி மாணவி விஷம் குடித்து தற்கொலை. திருச்சியில் பரிதாபம்.

போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி, தேனுார், முருங்கபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது40). இவரது மகள் காயத்திரி (வயது20) இவர் திருச்சி அரசு கல்லூரியில் ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.

இவர் திருச்சி எடமலைப்பட்டி புதுார், ராஜிவ் காந்தி நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த டிச.22ந் தேதி காயத்திரி செல்போனில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது உறவினர் அவரை செல்போனில் அதிக நேரம் செலவிடாதே என கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து.

சிறிது நேரம் சென்ற பின் அவரது அறை கதவை திறந்த அவரது உறவினர் அதிர்ச்சி அடைந்தார்.

காயத்ரி தனது அறையில் மயங்கி கிடந்துள்ளார்
பின்னர் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை அழகர் சாமி அளித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.