திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயம் சார்பில் 35வது ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா, நலத்திட்ட உதவிகள், விருது வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஜே கே சி நிறுவனர் ஐசிஎப் பேராயம் முனைவர் பா. ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஐசிஎப் பேராயம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரெவரண்ட் சி.அருள் வரவேற்புரை ஆற்றினார். ஐசிஎப் பிஷப் கவுன்சில் தலைவர் சென்னை பேராயர் எம் எஸ் மார்ட்டின் கிறிஸ்மஸ் செய்தி வழங்கினார். மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி பி ரமேஷ், ஜேகேசி கௌரவ தலைவர் பேராசிரியர் ரவிசேகர், ஸ்ரீரங்கம் தமிழ்ச்சங்கம் தலைவர் ரெவரண்ட் எஸ் பால் ஜெயக்குமார், உலகத்தமிழ் திருக்குறள் பேரவை அமைச்சர் பேராசிரியர் எம் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மதுரம் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஐவன் மதுரம் எம்டி, ஓய்வு பெற்ற புதுச்சேரி பிரின்ஸ்பால் முனைவர் எம் சுந்தரமூர்த்தி, ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் டாக்டர் சையத் ஜாகீர் ஹசன், முன்னாள் விஜிபி உப தலைவர் ஆர். தங்கையா, திருச்சி மேசியா அற்புத ஊழியங்கள் ரெவரண்ட் ஸ்டீபன் ராஜ், ஆடிட்டர் பி வீரமணி, வழக்கறிஞர் ஜி. ஜெயக்குமார், காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டீல் சங்க தலைவர் டாக்டர் கேஎம்.எஸ்.ரபீக் அஹமது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்கள் ஆர் முரளிதரன், மனிதநேயம் ஆரோக்கியசாமி, மாநகர காவல் துறை உதவி ஆய்வாளர் கே பாஸ்கர், முன்னாள் தாசில்தார் கே.எஸ்.அப்துல் அஜீஸ், ஜே கே சி நிர்வாக குழு உறுப்பினர் ஆடிட்டர் ரிச்சர்டு, ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு தலைவர் ஸ்டீல் என்.எம். சலாவுதீன் மற்றும், பாரம்பரிய சித்த மருத்துவர் மதி குமார், சக்தி மருத்துவமனை டாக்டர் ஆர் சுகானந்தம், ஐ.சி.எப்.செய்தி தொடர்பாளர் விக்னேஷ், அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ, நாடக நடிகர் கவிஞர் ஜெயபிரகாஷ், எடமலைப்பட்டி புதூர் ராஜலிங்கம், பாஸ்டர்கள் எஸ். ஜெயசீலன், ஐசிஎப் செயலர் எ. ராஜன், மாநகர செயலாளர் எஸ் ஜான்டோமினிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
யோகா கலை நிகழ்ச்சி யோகா ஆசான் எஸ் பாலசுந்தர் அவர்களின் மாணவிகள் டி அர்ச்சிதா, டி வேதசுருதி ஆகியோர் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அழைப்பின் மகிழ்வில் ஜெ மனோகரி ராஜ்குமார். முடிவில் ஜே கே சி மகளிர் அணி தலைவி சகுந்தலா சந்தானகிருஷ்ணன் நிகழ்ச்சி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சர்வ சமய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் உலகத் தமிழ் திருக்குறள் பேரவை திருச்சி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 40 நபர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், 50 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.