Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம்: பேரனுடன் நடந்து சென்ற மூதாட்டியின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர் .

0

'- Advertisement -

 

திருவரங்கத்தில்
பேரனுடன் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு:

இருசக்கர வாகனத்தில் மர்மநபர் தப்பி ஓட்டம்.

திருவரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி .
இவரது மனைவி உஷா (வயது 60). இவர் தனது பேரனுடன் அப்பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் வீட்டுக்கு திரும்பி சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டு இருந்தார் . அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் உஷாவின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான்.

இது குறித்து உஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.