ரயில்வே அமைச்சர் விருது பெற்று திருச்சி திரும்பிய பொன்மலை ரெயில்வே பொறியாளர்க்கு
திருச்சியில் உற்சாக வரவேற்பு.
இந்தியாவில் முதல் பயணிகள் ரெயில் இயக்கியதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ரெயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது.
நாட்டின் 69-ஆவது ரெயில்வே வாரவிழாவை முன்னிட்டு ரெயில்வே துறையில் சிறந்து விளங்கும் பணியாளர்களை பாராட்டுவகையில் ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ என்றும் விருது வழங்கப்படும்.
இதில் தெற்கு ரெயில்வேயில் இருந்து 8 பணியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு டிச.21- ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறவுள்ள நிகழ்வில் ரெயில்வே அமைச்சர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
உற்பத்தித் திறனை மேம்படுத்த பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகயும், செயல் திறனை மேம்படுத்தி செலவுகளை குறைத்தமைக்காகயும், பொன்மலை ரெயில்வே பணிமனையில் பணிபுரியும் மூத்த பொறியாளர் டி.எம்.கோபால கிருஷ்ணன்க்கு ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விருது வழங்கினார்.
டி.எம்.கோபாலகிருஷ்ணர் அவரை திருச்சி ரெயில்வே நிலையத்தில் மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம்,
ரெயில்வே சீனியர் பொறியாளர் மோகன்தாஸ், சீனிவாசன்,
சிந்தாமணி,
சஹானா பிரியதர்ஷினி,
அபிஷேக் ராகவ்,
காவ்யா பிரியதர்ஷினி,
மோகன்,
உதயா மற்றும் பொன்மலை ரெயில்வே தொழிலாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினார்கள் பொன்னாடை போர்த்தி,நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.