திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
மனு அளித்த மமக நிர்வாகிகள்.
மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம், 18வது வார்டு, பூக்கொல்லை கிளை, சார்பாக மாவட்ட தலைவர் முகமது ராஜா அவர்கள் அறிவுறுத்தலின் படி ,
மமக மாவட்ட செயலாளர் A.அஷ்ரப் அலி தலைமையில் மாநகராட்சி துணை ஆணையரிடம் மக்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

இம்மனுவில் கூறியிருப்பதாவது:-
1.திருச்சி கிழக்கு மாவட்டம் 18 வது வார்டு, பூக்கொல்லை பகுதியில் நீண்ட காலமாக பழுதாகி உள்ள தார் சாலை போடாமல் அதிகாரிகள் கால தாமதம் செய்கின்றனர். மிக விரைவாக தார் சாலை உடனே அமைத்து தருமாறும்,
2.சுப்பராயர் கோவிலுக்கு செல்லும் இரட்டை வாய்க்கால் பாலத்தில் இரவு நேரத்தில் மின்விளக்கு இல்லாததால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால், ம பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள், கோவிலுக்கு செல்பவர்கள், மற்றும் பொது மக்களுக்கும், மாலை , இரவு நேரங்களில் கடந்து செல்வதற்கு மின்கம்பம் அமைத்து அதிகம் வெளிச்சம் தரும் மின்விளக்கு அமைத்து தருமாறும்,
3. பால் பண்ணை சிக்னலில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூலித் தொழிலாளர்கள் பஸ்ஸில் ஏறி இறங்குவதால் தங்களுடைய சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ள இலவச பொது கழிப்பறையும்,குடி தண்ணீர் தொட்டி அமைத்து பொது மக்களுக்கு தருமாறும்,
4.தெருக்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் நாய்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் மு.சையது முஸ்தபா,மாவட்ட துணை செயலாளர் சம்சுதீன்,மாவட்ட விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் காட்டூர் ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.