அடுத்த பருவ தேர்வுக்கான கல்வி கட்டணத்தை இந்த பருவத் தேர்வுக்குள் கட்ட கட்டாயப்படுத்தும் திருச்சி எம்.ஏ.எம் கல்லூரி நிர்வாகம் மீது உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா ?
அடுத்த பருவ தேர்வுக்கான கல்வி கட்டணத்தை இந்த பருவ தேர்வில் கட்ட சொல்லும் எம்.ஏ.எம் கல்லூரி நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பயின்ற வரக்கூடிய மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அனைத்து கல்லூரிகளுமே பருவத் தேர்வுக்கான கல்வி கட்டணத்தை அந்த பருவத்தில் தான் கட்ட வேண்டும் என்பது உயர்கல்வி துறையின் வழிகாட்டல் ஆகும.
இவ் வழிகாட்டலை மீறி எம்.ஏ.எம். கல்லூரியானது நடந்த கொண்டிருக்கும் பருவத்தில் அடுத்த பருவத்திற்கான கல்வி கட்டணத்தை கல்லூரி நிர்வாகமானது மாணவர்களிடம் கேட்டு மாணவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 5ம் பருவம் நடந்து கொண்டிருக்கும்போது 6ம் பருவத்திற்கான கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது .
கல்லூரி மாணவர்கள் 5ம் பருவத்திற்கான முழுமையான கல்விக் கட்டணம் கட்டி இருந்தாலும் மாணவர்களால் 5 பருவம் தேர்வு எழுத முடியாத நிலைக்கு இக்கல்லூரியின் மாணவர்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
கால அவகாசம் கேட்டு செல்லக்கூடிய மாணவர்களை அவமதிப்பு செய்து அவர்களை உடனடியாக நாளைக்குள் கல்லூரி கட்டணத்தை கட்ட வேண்டும் என்று கல்லூரி நிர்வாகமானது மாணவர்களை எச்சரித்துள்ளது.
மேலும் இக்கல்லூரியில் அபராதம் என்னும் முறையில் மாணவர்களிடம் கந்து வட்டியை வசூல் செய்பவர்கள் போல கல்லூரியின் பேராசிரியர்கள் நடந்து கொள்வதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
பெற்றோர்களை மரியாதை குறைவாக நடத்துவது என இக்கல்லூரியின் பிரச்சனைகளை பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். இதனை உடனடியாக உயர்கல்வித்துறை தலையிட வேண்டும் இல்லை என்றால் இந்திய மாணவர் சங்கம் தலைமையிலான போராட்டம் முன்னெடுக்கப்படும்.
இச்செயலை இந்திய மாணவர் சங்கம் திருச்சி புறநகர் மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
மாவட்ட தலைவர்
தோழர் ,
வைரவலவன்
மாவட்ட செயலாளர்
தோழர்,ஆமோஸ்