Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மழைநீர் தேங்கி கழிவறை செல்ல முடியாமல் தவிக்கும் மாணவ மாணவிகள் . நடவடிக்கை எடுக்க மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை.

0

 

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய இனாம்மாத்தூர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

சென்ற வாரம் புதன்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக பள்ளி சுற்றி மழைநீர் சூழ்ந்து உள்ளது.

பள்ளியில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மாணவ மாணவிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் இந்த அவலநிலையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவ, மாணவிகளுக்கு நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.