மாநில அளவில் நடைபெற்ற போலீஸ் மீட் 2024 என்ற காவல்துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றது திருச்சி பாண்ட் (3). இது இந்த வகை நாய் தெரியுமா ?
சென்னையில் அண்மையில் நடைபெற்ற மோப்ப நாய்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் திருச்சி மாவட்ட காவல்துறையைச் சோ்ந்த ‘ பாண்ட்-3 ‘ என்ற நாய் முதல் பரிசை வென்று தங்கப்பதக்கம் பெற்றது.

காவல் துறையில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் மாநில அளவில் திறனறியும் போட்டிகள் நடைபெறும் நிலையில், மோப்ப நாய் படையைச் சோ்ந்த நாய்களுக்கென தனிப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் சென்னையில் அண்மையில் நடந்த ‘போலீஸ் மீட்-2024’ என்ற போட்டிகளில் மாநிலம் முழுவதிலுமிருந்து காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய மோப்ப நாய்கள் கலந்து கொண்டன.
அப்போது கட்டளைக்குக் கீழ்படிதல், ஒழுக்கம் ஆகியவற்றுடன், தனித்திறனறியும்
போட்டிகளும் நடைபெற்றன. இதில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் உள்ள நாய்களுக்கிடையிலான போட்டிகளில் திருச்சி மாவட்ட காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் பணியில் உள்ள ‘பாண்ட்’ (3) என்ற லாப்ரடாா் வகையைச் சோ்ந்த நாய் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.