ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வழக்கறிஞர் சுதர்சன் முன்னிலையில் ராகவேந்திரா மடத்தில் வெள்ளித்தேர் இழுத்து அன்னதானம்
திருச்சியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில் வெள்ளி தேர் இழுத்த ரசிகர்கள்
பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.

திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்காக திருச்சி மாவட்ட தலைமை ரஜினி மன்றத்தின் சார்பாக திருவரங்கம் கங்காரு கருணை முதியோர் இல்லத்தில் காலை உணவும் வழங்கப்பட்டது.
அதன் பிறகு திருவரங்கம் நகர தலைமை ரஜினி மன்றத்தின் சார்பாக ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் வெள்ளி தேர் இழுத்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு இணைச்செயலாளர் கர்ணன் தலைமை தாங்கினார் .
துணை செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராயல் ராஜு, பாலன், ரஜினி ஆனந்த், சுரேஷ் , மற்றும் மாவட்ட மாநகர பகுதி மற்றும் அனைத்து ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.